தொப்பூரில்லாரிகள் மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-01-21 18:45 GMT

நல்லம்பள்ளி:

அரியானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு மருந்து பாரம் ஏற்றி கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை டெல்லியை சேர்ந்த டிரைவர் பவன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம் தொப்பூர் டி.புதூர் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மற்றொரு லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் கன்டெய்னர் லாரி டிரைவர் பவன் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து விபத்தில் சிக்கிய டிரைவர் பவனை மீட்டனர். பின்னர் 2 லாரிகளையும் மீட்பு குழுவினர் போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்