கார் மோதி விவசாயி படுகாயம்
மொபட் மீது கார் மோதி விவசாயி படுகாயமடைந்தார்.
திருப்புவனம்
பூவந்தி அருகே உள்ள பாப்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 55). விவசாயியான இவர் திருப்பாச்சேத்தி வழியாக நான்கு வழி சாலையில் மொபட்டில் திருப்புவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மனோஜ் மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
லாடனேந்தல் விலக்கு பகுதியில் திரும்பும்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் சென்ற மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மனோஜ் மீது திருப்புவனம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.