மானாமதுரை அருகே கார் மோதி தம்பதி பலி

கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

Update: 2023-01-18 18:45 GMT

மானாமதுரை, 

கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தம்பதி பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 60). இவருடைய மனைவி கஸ்தூரி (54).

நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் மானாமதுரை அருகே தீயனூர் கிராமத்தில் நடைபெற்ற தங்கள் உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தீயனூர் விலக்கு அருகே ெசன்றபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாமணி, கஸ்தூரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ராஜாமணி, கஸ்தூரியின் உடல்களை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்