கார்கள் மீது லாரி மோதி விபத்து

சூளகிரி அருகே கார்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2022-12-30 18:45 GMT

சூளகிரி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் மாவட்டம் சங்ககிரி நோக்கி சென்றது. சூளகிரி அருகே சுண்டகிரி என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற 2 கார்கள் மீது அடுத்தடுத்து லாரி மோதியது. இந்த விபத்தில் கார்கள் சேதமடைந்தன. இதில் 2 கார்களில் சென்ற 10 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்