விபத்தில் காவலாளி பலி

விபத்தில் காவலாளி பலியானார்.

Update: 2022-11-20 21:12 GMT

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 60). இவர் முத்தம்பட்டியில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு கல்லூரி செல்வதற்காக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ராஜமாணிக்கம் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜமாணிக்கத்தின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்