சூளகிரி:
சூளகிரி தாலுகா திம்மனப்பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீராமன் (வயது 46). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று மாலை, ஸ்ரீராமன் தனது மோட்டார் சைக்கிளில் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். மோதுகானப்பள்ளி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.