நடைபயிற்சிக்கு சென்ற பெண் கார் மோதி பலி

நடைபயிற்சிக்கு சென்ற பெண் கார் மோதி பலியானார்

Update: 2022-11-05 19:03 GMT


நடைபயிற்சிக்கு சென்ற பெண் கார் மோதி பலியானார்

சேவூர் அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சாந்தா (வயது 65). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராமகிருஷ்ணன் நெசவு தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சாந்தா சேவூர் - கோபி சாலையில், சாவக்கட்டுபாளையத்தில் நேற்று காலை 6 மணியளவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு காரில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ராமலிங்கம் தனது உறவினர்கள் இருவருடன், சேவூரிலிருந்து வந்துகொண்டிருந்தார். அதே ரோட்டில் எதிரே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சாந்தா மீது எதிர்பாராதவிதமாக அந்த கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கார் நிலை தடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில், மின் கம்பம் கிழே விழுந்தது. இதில் கார் டிரைவர் மற்றும் காரில் பயணம் செய்த 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காயம் அடைந்தவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவலறிந்து வந்த சேவூர் போலீசார் சாந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேவூர் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்