திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகம் பாப்பாகுடி காலனியை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன்கள் பூமிநாதன் (வயது 26), இளையராஜா (24) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சிவகங்கை சென்று விட்டு பாப்பாகுடி காலனிக்கு வந்து கொண்டிருந்தனர். இளையராஜா மோட்டார்சைக்கிளை ஓட்டினார். படமாத்தூர் கண்மாய் அருகே வரும்போது எதிரே வந்த கார் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இளையராஜா பரிதாபமாக இறந்தார். பூமிநாதன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.