மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

சங்ககிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் பிளஸ்-2 மாணவர் காயம் அடைந்தார்.

Update: 2022-10-09 21:07 GMT

சங்ககிரி:

தனியார் நிறுவன ஊழியர்

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் மகன் விஷால் (வயது 16), விஷால், காங்கேயம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான்.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த உறவினர் நவீன் (25) என்பவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று திருப்பூரில் இருந்து சேலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

விபத்தில் சாவு

சங்ககிரி அருகே குப்பனூர் பைபாஸ் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது பின்னால் வந்த பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நவீன், விஷால் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த போலீசார் இருவரையும் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நவீன் பரிதாபமாக இறந்தார். விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்