சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிக விபத்து பலியில் சிவகங்கை மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது. எனவே, சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-09 18:45 GMT

சிங்கம்புணரி, 

அதிக விபத்து பலியில் சிவகங்கை மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது. எனவே, சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து பலி அதிகம்

தமிழகத்தில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வாகன விபத்துகளால் உயிர் பலி ஏற்படுவதில் 4-வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் உள்ளது. குறிப்பாக சிங்கம்புணரியில் சமீப காலங்களாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போதிய சான்றிதழ் இன்றியும், ஓட்டுனர் உரிமம் இன்றியும் இயக்கப்படுகிறது.

சிங்கம்புணரி வட்டாரத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இருசக்கர வாகனங்கள் ஓட்டுகின்ற எண்ணிக்கை குறிப்பாக சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை அதிகமாக ஓட்டி வருவதும், மின்னல் வேகத்தில் செல்வதும் விபத்துக்கு ஒரு காரணமாகின்றது.

பெற்றோர் மீது வழக்கு

இது குறித்து சமூக ஆர்வலர் தினேஷ் என்பவர் கூறுகையில், சமீப காலமாக இருசக்கர வாகனங்களை சிறுவர்கள் அதிகமாக ஓட்டி வருகிறார்கள். பெற்றோர்கள் அவர்களை நம்பி தங்களின் இருசக்கர வாகனங்களை கொடுத்து ஓட்ட சொல்லுகிறார்கள். இதனால் பெற்றோர் அவர்களுக்கு அறியாமலே குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடியதாகிறது. சிறுவர்கள் பயமின்றி அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் எதிர்வரும் வாகனங்களில் வருவோருக்கு விபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால் இருதரப்பிற்குமே காயங்கள் ஏற்படுகின்றது. சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே மோட்டார்சைக்கிளில் சிறுவர்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆபத்தை உணராமல் பயணிக்கின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இருசக்கர வாகனங்களை இயக்க கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்று விபத்துகளை தடுக்க வாகனங்களை ஓட்டிவரும் சிறுவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். . 

Tags:    

மேலும் செய்திகள்