டிப்பர் லாரி மோதி முதியவர் பலி

டிப்பர் லாரி மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-09-25 18:45 GMT

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே கல்லாப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பையா (வயது 80). இவர் நேற்று காலையில் சிறுகூடல்பட்டி பகுதியில் உள்ள வைத்திய சாலையில் சைக்கிளில் சென்றார். திருப்பத்தூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிப்பர் லாரி அவர் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழச்சிவல்பட்டி போலீசார், சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்