சமயநல்லூர் அருகே பரவை சத்தியமூர்த்தி நகர் கள்ளிக்குடி மெயின் ரோட்டில் குடியிருந்து வருபவர் செந்தில்குமார். இவரது மகன் பொன்ராம் (வயது 3). நேற்று காலை 9 மணிக்கு சாலையோரம் பொன்ராம் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த பகுதியில் விளாங்குடி பஞ்சுமில் வேன் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்தது.அந்த வேன் எதிர்பாராத விதமாக வளைவில் திரும்பிய போது பொன்ராம் மீது வேன் மோதியதில் சிறுவன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன்டிரைவர் மதுரை மாபாளையத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.