விபத்தில் சாலை பணியாளர் பலி

விபத்தில் சாலை பணியாளர் பலியானார்.

Update: 2022-09-17 18:45 GMT

திருப்புவனம்,

திருப்பாச்சேத்தியில் உள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று திருப்பாச்சேத்தியிலிருந்து திருப்புவனத்திற்கு வேலைக்காக தனது மொபட்டில் சென்றார். மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் வந்தபோது வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்துசிவா (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், முருகேசன் மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார். விபத்து குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்