கார் மோதி லாரி டிரைவர் பலி

கார் மோதி லாரி டிரைவர் பலியானார்.

Update: 2022-08-11 22:16 GMT

விழுப்புரம் மாவட்டம் எலத்திமங்களம், ஒத்தவாடி தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் கோவிந்தன் (வயது 33), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து விழுப்புரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சேலம்-சென்னை புறவழிச்சாலை எருமாபாளையம் அருகே சென்ற போது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.

இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் நேற்று அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்