பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

பஸ்-மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2022-07-28 17:32 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள மணியாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் கார்த்திக் (வயது 19). இவரும், அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர்களான சிவராஜ் (24), குணசேகரன் (16) ஆகியோரும் எஸ்.புதூரிலிருந்து மோட்டார்சைக்கிளில் மணியாரம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சியிலிருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற தனியார் பஸ் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த சிவராஜ், குணசேகரன் ஆகியோர் பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

மேலும் செய்திகள்