சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து
சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
பொங்கலூரில் மாம்பழம் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. பொங்கலூர் கடைவீதி அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.