மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2022-07-03 22:03 GMT

சூரமங்கலம்:

சேலம் அய்யம்பெருமாம்பட்டி பழையூர் பகுதியை சேர்ந்தவர் பெரியதாயி (வயது 65). இவர் நேற்றுமுன்தினம் இரவு பழையூர் பகுதியில் உள்ள சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெரியதாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்