கார் மோதி 2 பேர் படுகாயம்

கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-05-29 15:22 GMT

சாயல்குடி, 

மதுரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது40), முருகன் என்பவரது மனைவி முத்துக்காளி (38) ஆகியோர் குடும்பத்துடன் ஆட்டோவி சாயல்குடி சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் கிருஷ்ணம்மாள், முத்து காளி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து சிவகங்கையை சேர்ந்த கார் டிரைவர் சித்திரைவேல் (35) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்