புதிய ஆணையர் பதவி ஏற்பு
கொடைக்கானல் நகராட்சி புதிய ஆணையராக சத்தியநாதன் பதவி ஏற்றுக்கொண்டார்.
கொடைக்கானல் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த நாராயணன், பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக உடுமலைப்பேட்டை நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர், நேற்று காலை கொடைக்கானல் நகராட்சி ஆணையராக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.