தூய்மை பணி மேற்கொள்வது குறித்து உறுதிமொழி ஏற்பு

ஆரணியில் அரசு மகளிர் பள்ளியில் தூய்மை பணி மேற்கொள்வது குறித்து உறுதிமொழி ஏற்பு

Update: 2022-07-01 13:13 GMT

ஆரணி

தமிழக அரசு வளர்ச்சிக்கான திட்டத்தில் நகரை தூய்மையாக வைத்திருப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

சுத்தமான பசுமையான நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்பதனை ஏற்படுத்தி என் குப்பை, என் பொறுப்பு, எனது நகரம் எனது பெருமை என்ற உறுதிமொழியும், விழிப்புணர்வும் ஏற்படுத்திய வருகின்றன.

அதன்படி ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி உத்தரையின்படி ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி முன்னிலையில் தூய்மை பணி மேற்கொள்வது குறித்து மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் பாபுஜி மற்றும் ஆசிரியர்கள் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்