தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி ஏற்பு
தேனி அரசு மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பதவி ஏற்றுக்கொண்டார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றியவர் டாக்டர் மீனாட்சிசுந்தரம். இவர், லஞ்சம் வாங்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பொது மருத்துவ துறை தலைவராக பணிபுரியும் டாக்டர் திருநாவுக்கரசு, மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன்படி நேற்று அவர், தேனி அரசு மருத்துவ கல்லூரியின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.