போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பதவி ஏற்பு
போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பதவி ஏற்றுக்கொண்டார்.
கோவை
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய மதிவாணன், சேலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
அவர் நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பு ஏற்ற போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் கூறுகையில், கோவை -அவினாசிரோடு உள்ளிட்ட பல சாலைகளில் சிக்னல் இல்லாத போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்த திட்டத்தை மற்ற சாலைகளிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவை நகரில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நவீன போக்குவரத்து திட்டங்களை நகரில் அமல் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.