தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்பு
ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் மாதத்தின் 4-வது சனிக்கிழமையான நேற்று நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் எம்.காவியா விக்டர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஜி.பழனி முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு என் நகரம் என் பெருமை. நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.