தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு

கூடலூர் காபி வாரியம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2022-11-03 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் காபி வாரியம் சார்பில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்கினார். விரிவாக்க உதவி அலுவலர் ராமஜெயம் வரவேற்றார். கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சண்முகம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அர்ஜுனன் ஆகியோர் தூய்மை பாரதம் குறித்து பேசினர்.

சுகாதார ஆய்வாளர் யோகராஜ் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைப்பது, கொரோனா, டெங்கு, பறவை உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுப்பதற்கான முறைகள் பற்றி பேசினார். இதில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து காபி வாரிய அலுவலர்கள் கூறும்போது, வருகிற 15-ந் தேதி வரை காபி வாரியம் சார்பில் பள்ளிகள் உள்பட பல்வேறு இடங்களில் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்