முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2022-06-15 18:23 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் தலைமை தாங்கினார். பொது இடங்களான ஆஸ்பத்திரி, வங்கி, பஸ்களில் முதியோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் வன்முறைகள் எந்த விதத்திலும் நடந்து விடாமல் இருக்க உளமார உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை மாநகர குற்ற ஆவண காப்பக கூடுதல் துணை கமிஷனர் ஞானசேகரன், சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஆறுமுகம், மாநகர குற்ற ஆவண காப்பக உதவி கமிஷனர் சரவணன் மற்றும் அலுவலக அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

* நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, சமூக நல அலுவலர் சரஸ்வதி, உதவி கலெக்டர் ஷேக், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்