ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

செங்கோட்டையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2022-10-31 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகம் முன் ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஊழல் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளா் பார்கவி, மேலாளா் ரத்னம், பொறியாளா் ஜெயப்ரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். கணக்கா் கண்ணன் ஊழல் ஒழிப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி வாசித்தார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் நகராட்சி பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப்பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்