மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த ஏ.சி.மெக்கானிக் சாவு

வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த ஏ.சி. மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-04-19 12:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். அவரது மகன் சந்திரசேகர் (வயது 32), ஏ.சி. மெக்கானிக். இவர், மோட்டார் சைக்கிளில் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் கல்லாங்குத்து கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகே செல்லும் போது நிலைதடுமாறி சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கவிழ்ந்து விபத்துகுள்ளானார்.

இதில் படுகாய் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்