கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-11 19:25 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பாளையங்கோட்டை, சமாதானபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 36) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் கடந்த 7 மாதங்களாக கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவரைப் பிடிக்க சேரன்மாதேவி கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி, சேரன்மாதேவி போலீசார் நேற்று கோபாலகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்