திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்
தலைவாசல்
தலைவாசல் அருகே வேப்பம்பூண்டி பகுதியில் கடந்த மார்ச் மாதம் டிராக்டர் திருட்டு போனது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரில் மணிகண்டன் என்பவரை வீரகனூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா சிலம்பநாதன் பேட்டையை சேர்ந்த மணி என்கிற குணசேகரன் (26) என்பவரை தேடி வந்தனர். இதையடுத்து பண்ருட்டி பகுதியில் இருந்த மணியை வீரகனூர் போலீசார் கைது செய்து ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.