குதிரை பந்தய வீரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

குதிரை பந்தய வீரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-17 21:27 GMT

திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 23). இவர் குதிரை வண்டி பந்தய வீரர் ஆவார். இவரை முன்விரோதம் காரணமாக கடந்த மே மாதம் 26-ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிளகுப்பாறை செல்வநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (30), தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் பல நாட்களாக தலைமறைவாக இருந்த மின்னப்பன்நகரை சேர்ந்த தினேஷ்பாபுவை (28) தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்