ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது

ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது

Update: 2023-06-23 14:24 GMT

நல்லூர்

திருப்பூர் செரங்காட்டை சேர்ந்தவர் ஆட்டோ தினேஷ் என்கிற தினேஷ்குமார். பிரபல ரவுடியான இவர் கடந்த வாரம் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ராம்குமார் (வயது 26) என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ராம்குமார் மதுரையில் இருந்து திருப்பூர் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திர பிரசாத், தங்கவேல் மற்றும் போலீசார் ராம்குமார் வருவதை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது ராம்குமார் கோவில்வழி பஸ் நிலையம் வந்தபோது அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்