108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் பயன்

108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

Update: 2022-10-11 21:23 GMT

ஜெயங்கொண்டம்:

தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையானது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி படிப்படியாக ஆம்புலன்சுகளின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது தமிழகம் முழுவதும் 1,353 ஆம்புலன்சுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்சுகள் 16, அதிநவீன உயிர்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 2-ம், பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 756 பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 63,105 பேரும், சாலை விபத்துகளில் 29,791 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1,33,860 பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 544 தாய்மார்களுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் அவசர ஊர்தியிலேயே பிரசவம் நடைபெற்றது. மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 456 தாய்மார்கள் அவர்களது வீடுகளிலேயே குழந்தை பெற்றுள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவலை 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு ெதரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்