பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் விஜயகுமார் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்்கைகள் வலியுறுத்தப்பட்டன.