அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
அச்சன்புதூர் அரசு பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கடையநல்லூர்:
அச்சன்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் டாக்டர் சுசீகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் மிக்கேல் அந்தோணி வரவேற்றார். அச்சன்புதூர் வேல் பைனான்ஸ் உரிமையாளர் முத்துராஜ், பள்ளிக்கு ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒலிபெருக்கி கருவிகளை அன்பளிப்பாக வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சதீஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜூ, பாலகிருஷ்ணன், ஸாலிகாபானு, மீனா, ஜெயா ஆகியோர் செய்திருந்தனர். கட்டாரிப் பாண்டியன், இசக்கித்துரை மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.