குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
குமாரபாளையம்:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.