பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3½ பவுன் நகை அபேஸ்

திண்டிவனம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3½ பவுன் நகை அபேஸ் செய்த வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

Update: 2022-12-16 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் காலனியை சேர்ந்தவர் குப்பம்மாள்(வயது 77). இவரது வீட்டுக்கு நேற்று வந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர், நகைகளுக்கு பாலீஸ் போட்டு தருவதாக கூறினார். இதை நம்பி குப்பம்மாளும், 3½ பவுன் நகையை கழற்றி கொடுத்தார். உடனே அந்த வாலிபர் பாலீஷ் போடுவதுபோல் நடித்தபடி, மஞ்சள் எடுத்து வருமாறு கூறினார். குப்பம்மாள் உள்ளே சென்றதும், அந்த வாலிபர் நகையுடன் அங்கிதிண்டிவனம் அருகேருந்து ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குப்பம்மாள், வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்