உடுமலை
இந்திய அஞ்சல் துறை, உடுமலை நகராட்சி ஆகியவற்றின் சார்பில் ஆதார் புதியது எடுக்க மற்றும் திருத்தம் செய்ய மற்றும் நகராட்சி வரிவிதிப்பு, பெயர் மாற்றம், குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம் உடுமலை ருத்ரப்பாநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. முகாமில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுத்திருந்தால் அவர்களுக்கு 5 வயது முடிந்திருந்தால் பயோ மெட்ரிக்குடன் கூடிய ஆதார் அட்டை எடுக்கப்பட்டது. வயது முதிர்ந்தவர்களுக்கு பயோ மெட்ரிக் சரியாக பதிவு விழாதவர்களுக்கு புதிதாக பயோ மெட்ரிக் பதிவு செய்யப்பட்டது. முகாமில் புதிதாக அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கும், ஆர்.டி.கணக்கும் தொடங்கப்பட்டது. முகாமை நகராட்சி தலைவர் மு.மத்தீன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சு.கலைராஜன் முன்னிலை வகித்தார். அஞ்சல்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.