அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி அம்பாள் தீர்த்த வாரி நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-07-22 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி அம்பாள் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி் அருள் பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் எமனை சிவன் காலால் எட்டி உதைத்ததால் இங்கு திரளான பக்தர்கள் வந்து தங்கள் ஆயுள் விருத்திக்காக உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்கிறார்கள். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

தீர்த்தவாரி

இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழாவையொட்டி கொடியேற்றம் 13- ந் தேதி நடைபெற்றது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கடைசி நாள் முக்கிய நிகழ்ச்சியான 10 -ம் நாள் திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள குளத்திற்கு அபிராமி அம்பாள் எழுந்தருளினார்.

அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீர்த்த வாரி நடைபெற்றது. இதில் அபிராமி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் கட்டளை தம்பிரான் சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்