ராயக்கோட்டை
ராயக்கோட்டையில் சுயம்பு ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர 20-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நிகழ்ச்சியாக திருப்பள்ளி எழுச்சி நடந்தது. இதையடுத்து சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்து அம்மன் கொடியேற்றி வேள்வி பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக வஜ்ஜரநாதேஸ்வர தீர்த்தத்தில் இருந்து புனிதநீர் கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையடுத்து சோமநாதேஸ்வர கோவிலில் இருந்து செவ்வாடை பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கஞ்சி கலயம், பூ கரகம் ஆகியவைகளை முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சக்தி பீடம் சன்னதியை அடைந்தனர். பின்னர் பால் அபிஷேகம், மகா தீபாராதனை செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.