சங்கரேஸ்வரர் கோவிலில் ஆடி தபசு விழா
சிறுத்தொண்டநல்லூர் சங்கரேஸ்வரர் கோவிலில் ஆடி தபசு விழா கொண்டாடப்பட்டது.
ஏரல்:
ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் கோமதி அம்பாள் சமேத சங்கரேஸ்வரர் கோவிலில் ஆடித்தபசு விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அன்று அதிகாலையில் சங்கரேஸ்வரர், கோமதி அம்பாளுக்கு அபிஷேக, தீபாராதனையும், அம்பாள் தவசுக்கு புறப்படுதலும் நடந்தது. காலை 8.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். மதியம் அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. இரவு சங்கரேஸ்வரர், சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு சப்பரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவில் சங்கரநாராயணர், அம்பாளுக்கு சங்கரேஸ்வரராக காட்சி கொடுத்தல் நடந்தது. அதனைத் தொடர்ந்து சங்கரேஸ்வரர், கோமதி அம்பாள் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.