கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா-நாளை தொடங்குகிறது

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா நாளை தொடங்குகிறது.

Update: 2023-07-18 18:52 GMT

ஆரணி

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா நாளை தொடங்குகிறது.

கோட்டை வேம்புலி அம்மன் கோவில்

ஆரணி கோட்டை மைதானம் அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வேண்டும் வரங்களை தந்திடும் கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவிலில் 50-வது ஆண்டாக ஆடி வெள்ளி விழா நாளை தொடங்குகிறது.இதனையொட்டி நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் கோவில் வளாகத்தில் உலக நன்மைக்காக சிவகாளி சித்தர் பீடம் சித்தஞ்சலி மோகனந்தா சுவாமிகள் தலைமையில் 508 விளக்கு பூஜை நடக்கிறது.

தொடர்ந்து 21-ந் தேதியன்று முதல் வெள்ளியையொட்டி அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மகா அலங்காரம் , மகா தீபாராதனையுடன் நடக்கிறது.

தொடர்ந்து ஆரணி கமண்டல நாக நதி ஆற்றங்கரையிலிருந்து பூங்கரகம் ஜோடித்து பம்பை உடுக்கைகளுடன் நகரின் முக்கிய வீதியின் வழியாக ஊர்வலம் நடக்கிறது. பின்னர் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் திருவிழாவும் நடைபெறுகின்றது.

புஷ்ப பல்லக்கு

மாலையில் கோவில் அருகாமையில் இருந்து நூதன புஷ்பப் பல்லக்கில் சுவாமிகளை அலங்கரித்து புஷ்பப் பல்லக்கினை ரத்தனகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் தொடங்கி வைக்கவும், நகரின் மாட வீதியின் வழியாக நாதஸ்வரம் , தவில் இசை கச்சேரி, தாரை ,தப்பட்டை, ஒயிலாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் ,கரகாட்டம் குழுக்களுடன் நடக்கிறது.

22-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் கோவில் அருகாமையில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திரைப்பட இசையமைப்பாளர் தீனா மற்றும் பின்னணி பாடகர் செந்தில் தாஸ், சின்னத்திரை லிட்டில் ஸ்டார் பாரத், அனு ஆனந்த் மற்றும் குழுவினர்களுடன் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

ராட்டினம்

விழாவையொட்டி ஆரணி நகரில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன கோட்டை மைதானத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கு அம்சமான ராட்டினங்கள், 'டோரா டோரா', மரண கிணறு, கப்பல் உள்ளிட்ட அம்சங்களும் அமைக்கப்பட்டு வருகின்றது.

விழாவுக்கான ஏற்பாட்டினை விழா குழு தலைவர் ஜி.வி. கஜேந்திரன் மற்றும் விழா குழு நிர்வாகிகள் ஆர்.சுப்பிரமணி, பி. நடராஜன், நேமி ராஜா, குணசேகரன், செல்வராஜ் ,பேராசிரியர் சிவா, ஆசிரியர் ஏழுமலை, ஆவண எழுத்தர் சீனிவாசன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறன், டீக்கடை ராஜா, இளையராஜா, சங்கர், வினோத், சுரேஷ், ஏ.இ.சண்முகம், மாமண்டூர் சுப்பிரமணி, வேலன், கொங்கராம்பட்டு ஆறுமுகம், வளளையாபதி உள்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்