கோத்தகிரி மாரியம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை

கோத்தகிரி மாரியம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றன.

Update: 2023-07-17 18:45 GMT

சிறப்பு அலங்காரத்தில் கடைவீதி மாரியம்மன். 

கோத்தகிரி: ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாத அமாவாசை ஆகிய நாட்கள் அம்மனுக்கு வழிபாடு செய்ய உகந்த நாட்களாக கருதப்படுகிறது. அதன்படி கோத்தகிரி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஒவ்வொரு ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆடி மாத அமாவாசை நாளான நேற்று காலை கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் கருமாரியம்மன் கோவில் உள்பட கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்