ஆடி அமாவாசை பூஜை

திண்டுக்கல் அருகே வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜை நடந்தது.

Update: 2023-07-18 19:15 GMT

திண்டுக்கல் அருகே கம்பிளியம்பட்டியில் வரசித்தி வாராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 11-வது ஆண்டாக ஆடி அமாவாசையையொட்டி யாக வேள்வியுடன் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. குமாரசாமி குருக்கள் யாக வேள்வி பூஜையை நடத்தினார். பின்னா் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வாராகி அம்மன் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சஞ்சீவி சுவாமிகள் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்