ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்

தென்காசி மாவட்டத்தில், இன்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்

Update: 2022-08-26 17:56 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 1.8.2022 முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது. அதன் படி தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்