கீழப்பாவூரில் ஆதார் திருத்த முகாம்

கீழப்பாவூர் தபால் நிலையத்தில் ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது.

Update: 2023-01-19 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ் ஏற்பாட்டில், கீழப்பாவூரில் உள்ள தபால் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதார் திருத்த முகாம் நடக்கிறது. இதில் புதிதாக ஆதார் விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டணம் இல்லை. மேலும் ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகிய திருத்தம் செய்ய கட்டணம் ரூ.50 ஆகும். கைரேகை புதுப்பிக்க கட்டணம் ரூ.100 ஆகும். இந்த தகவலை கீழப்பாவூர் துணை அஞ்சலக அதிகாரி எஸ்.சக்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்