தபால் அலுவலகங்களில்ஆதார் அட்டை பெறலாம்:அதிகாரி தகவல்

கோவில்பட்டி கோட்ட தபால் அலுவலகங்களில்ஆதார் அட்டை பெறலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-19 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய -மாநில அரசுகள் பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்களில் ஆதார் மையங்களுக்கு தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் வருகிற பிப்.4-ந்தேதி வரை புதிய ஆதார் அட்டை பெறவும், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி, சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்