உசிலம்பட்டி அருகே கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு
உசிலம்பட்டி அருகே கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள துரைசாமிபுரம் புதூர் தெற்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் பெவன் (வயது25). இவர் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே பெவனை சக நண்பர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியில் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.