ஆடு திருடிய வாலிபர் சிக்கினார்
பாளையங்கோட்டையில் ஆடு திருடிய வாலிபர் சிக்கினார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அந்தோணி பாபு. இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒரு ஆட்டை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த ராமையா மகன் நாகராஜன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.