பசுமாடு திருடிய வாலிபர் கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே பசுமாடு திருடிய வாலிபர் கைது

Update: 2022-10-05 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பசுமாட்டை ஓட்டி வந்த மர்ம நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள வேலையாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(வயது 25) என்பதும், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள குழந்தைஏசு நகரை சேர்ந்த ஆனந்தராஜுக்கு சொந்தமான பசு மாட்டை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பசுமாட்டை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்