மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது
மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் புதுபல்லகச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தங்கமணி (வயது 31) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.